கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
‘வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உருவாக்க அறிவார்ந்த சமுதாய புரட்சியாலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாலும் தமிழ்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவோம்.
மக்களை ஏமாற்றி, அரசியல் பண்ணும் வஞ்சக போக்கையும்,
மக்களை அடிமையாக்கி,
ஏழ்மையாக்கி,
கடனாளியாக்கி,
மக்கள் பணத்தை கொள்ளையடித்து ராஜபோகமாய் வாழும் அரசியல் வியாதிகளுக்கு விடைகொடுப்போம்,
தமிழக அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்த ஒரு நல்ல அடைமழையாய் மாறுவோம் வாருங்கள், நம் எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல, தமிழ் பண்பாட்டு, கலாச்சார பெருமைமிகு தமிழ்நாட்டை உருவாக்குவோம், சீரமைப்போம் தமிழகத்தை’
என தெரிவித்துள்ளார்.