சென்னை பெருநகர காவல்துறை (Chennai City Police)வெளியிட்ட செய்திக் குறிப்பு:!
திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடுவதற்கு தமிழக அரசு அனுமதி கட்டணம் நிர்ணயித்துள்ளது.
திரையரங்குகளில் திரைப்படம் திரையிடும்போது அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்தால் அது தமிழ்நாடு திரைப்பட ஒழுங்குமுறை விதிகள், 1957-ன்படி குற்றமாகும்
இதனை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், தமிழக அரசு உள்துறை (திரைப்படம்) கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட்ட உத்தரவின்படியும், பொதுமக்களின் புகார்களை விசாரித்து திரைப்பட உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இத்தனிப்படையில் காவல் உதவி ஆணையாளர், வணிகவரித் துறை அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் நிலையில் உள்ள ஒரு வருவாய்துறை அலுவலர் ஆகியோர் இடம் பெறுள்ளனர்.
எனவே, திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த அனுமதி கட்டணத்தைத் காட்டிலும், அதிக விலைக்கு அனுமதி சீட்டு விற்பனை செய்தால் பொதுமக்கள் உடனேகாவல்துறை தொலைபேசி எண் 044-2345 2359 என்ற எண்ணில் தொடர்புக்கொண்டு புகார் அளிக்கலாம்! இவ்வாறு காவல் துறை அறிவித்துள்ளது.