சதீஷ் முத்துகிருஷ்ணன்.
இவ்வளவு நீளமாகவா சினிமாவுக்கு பெயர் வைக்க முடியும். அதனால் சுருக்கி சதீஷ் என்று வைத்துக்கொண்டு நாயகர்களுக்கு துணையாக வந்து காமடி செய்கிறவர்தான் இந்த சதீஷ். இவருக்கென ரசிகர் கூட்டம் இல்லாமலில்லை .விஜய்,தனுஷ் ,சிவகார்த்திகேயன் இப்படி பல முக்கியமான நடிகர்களுடன் நடித்ததால் புகழும் வந்தது.
வெளிநாடுகளில் நடக்கும் நட்ச்சத்திர இரவு நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் இவர்தான் தொகுப்பாளர். அந்த வகையிலும் பெயர் கிடைத்தது.
தற்போது கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறாராம் . இணைய தளத் தொடரிலும் நடிக்கப்போவதாக ஒரு தகவல் இருக்கிறது. இந்த நிலையில்தான் சினிமாவிலும் நாயகனாக நடிக்கப்போகிறார் என்கிறார்கள்.
முன்னேற்றம் என்பது வாழ்க்கையில் மட்டுமல்ல தொழிலிலும் இருக்கவேண்டுமல்லவா.. அதான் மணவாழ்க்கைக்கு பின்னர் ஹீரோ சான்ஸ் கிடைத்திருக்கிறது.பிரபல திரைப்பட நிறுவனமான ஏஜிஎஸ் தயாரிக்கவிருக்கிற படத்தில்தான் நாயக வாய்ப்பு என்கிறார்கள். விரைவில் அறிவிப்பினை எதிர்பார்க்கலாம்.
.