அரசியலுக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டிலேயே அடைந்து கிடந்தவர் ரஜினிகாந்த்.
மிகப்பெரிய பிம்பமாக இருந்தார். தவறாக எடுத்த முடிவுகளால் சுக்கு நூறாக உடைப்பட்டது அந்த பிம்பம்.
ரசிகர்களின் மனங்களில் ,சக்கரவர்த்தியாக அமர்ந்திருந்தவர் திரையிலாவது மன்னனாக திகழ்வாரா ?
அண்ணாத்தே படம்தான் சொல்லவேண்டும்.
சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரானாவினால் நிறுத்தப்பட்ட ஷூட்டிங் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன .
தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினியும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.
சண்டைக்காட்சியுடன் படத்திற்கான மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என தெரிகிறது. எனவே திட்டமிட்டபடி வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியில் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது.