சட்டசபை தேர்தலில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.கமல் கோவையில் போட்டியிடுகிறார் என்கிற தகவல் கோவை முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவரை எதிர்த்து பி.ஜே.பி தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக இந்த தொகுதியை பலரும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது கூட்டணிக்கட்சிகள் மற்றும் தனது கட்சி வேட்பாளர்களுக்கும் விரைந்து பிரசாரம் செய்யவேண்டி உள்ளதால் கமல் அவ்வப்போது ஹெலிகாப்டரிலும் பறந்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில்,நடிகையும் பாஜக பிரமுகருமான கவுதமி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். இதன் மூலம் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பாணியை நடிகை கவுதமியும் பின்பற்றுகிறார். இதுவும் பாஜக மேலிட கட்டளைப்படியே நடக்கிறது என்கிறது அரசியல் வட்டாரம்.