தேசிய விருது பெற்றிருக்கிற தனுஷும் நடிகை சாய் பல்லவியும் இணைந்து பாடிய ரௌடி பேபி ஆட்டத்துக்கு உலக அளவில் அளப்பரிய வரவேற்பு கிடைத்திருந்தது. யூ டியூப் தளத்தில் அந்த பாடலும் ஆட்டமும் சாதனை செய்திருந்தது. இந்த ஆட்டத்துக்கு மாஸ்டர் பிரபு தேவா.
தற்போது அதைப்போல தெலுங்கில் சாய் பல்லவியும் ,நாக சைதன்யாவும் மழையில் ஆட்டம் போட்டு பாடியிருக்கிறார்கள். டைரக்டர் சேகர் கம்முலாவின் படம் என்றால் இசைக்கு தனியிடம் கொடுத்திருப்பார். அண்மையில் ‘சாரங்க தாரியா ‘பாடல் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்திருந்தது.
அதைப்போல நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் இணைந்து ஆட்டம் போட்டிருக்கிற மழை டான்ஸ் பார்வையாளர்களின் கருத்தை கோடிகளில் அள்ளும் என எதிர்பார்க்கிறார்கள்.