ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தி, நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புதிய படம் சுல்தான். இப்படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய, பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா இப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படம் குறித்து ராஷ்மிகா மந்தனா கூறியதாவது,” தெலுங்கு கன்னடம் என நான் நடித்துக்கொண்டிருந்தாலும் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இப்படியொரு கதையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,திரிலிங்
பாக்கியராஜ் கண்ணன் மாதிரி ஒரு கோபமே படாத இயக்குனரை நான் பார்த்ததே இல்லை . மிகவும் பிரண்ட்லியான இயக்குனர் அவர். கார்த்தியை பத்தி சொல்லவே வேணாம்.எக்ஸ்லெண்ட் நடிகர். மற்ற நடிகர்களுக்கும் மிகவும் உதவக்கூடிய நடிகர்.படப்பிடிப்பின் போது என் காட்சி முடிந்து விட்டாலும் அவர் நடிக்கும் காட்சிகளை பார்த்து கொண்டே இருப்பேன். நாம நடிக்கும் போது நிறைய டிப்ஸ் கொடுப்பார்.அப்பத்தான் இவர் நடித்த கைதி படம் வந்தது. அப்படத்தை பார்த்து மிரண்டு போயிட்டேன்.
அவர்மட்டும் நல்லா நடிச்சா போதாது, மத்தவங்களும் நல்லா நடிக்கணும்னு நினைப்பவர் அவர். இந்த பட த்துக்காக நான் நிஜமாகவே டிராக்டர் ஓட்டியிருக்கேன். சேறு சகதின்னு பார்க்காம இறங்கி ஆட்டம் போட்டிருக்கேன்.அது ரொம்ப திரில்லிங்க்கான அனுபவம். எனக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேர் வாங்கித்தரக்கூடிய இப்படி யொரு படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு,பல மொழிகளில் நடிக்கிறேன் ஆனால் அந்தந்த பாஷைகளை நான் கத்துக்கணும்னு நினைக்கிறன்.அப்பத்தான் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை புரிஞ்சு நன்றாக நடிக்க முடியும்னு நம்புறேன்.
தமிழ் கூட கத்துக்கிட்டு இருக்கேன். முதலில் நான் இப்படத்தின் டப்பிங் கூட பேசலாம் என நினைத்தேன் ஆனால் கொரோனா லாக் டவுன் காரணமா சென்னைக்கு வரமுடியாம போச்சு.அதனால வேறு ஒருத்தர் எனக்கு டப்பிங் பேசியிருக்காங்க.அடுத்ததா விஜய் கூட நடிக்கிறீங்களான்னு கேட்கிறாங்க அது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.இப்ப கார்த்தியோட ஜோடியா நடிச்சிட்டீங்க அடுத்தது சூர்யாவோட நடிப்பீங்களான்னு கேட்கிறாங்க, அப்படி நடந்தா சந்தோசம்தான்.தமிழ் சினிமாவில் இவ்வளவு திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது சந்தோசமா இருக்கு ,தமிழில் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்கிறார்.