கதாநாயகனுக்கு இரட்டை நாயகிகள் என்றால் நாயகனுக்கு சந்தோஷம்தான்.
ஆனால் இரண்டு நாயகிகளில் ஒருவர்தானே நாயகனுக்கு நாயகியாக இருக்க முடியும். மற்றவர் தியாகியாகவோ ,அல்லது நாடு கடந்தோ சென்றாக வேண்டும்..
ஆனால் ரெண்டு பேருக்குமே சேதாரம் வரக்கூடாது என்றால் அது கதாசிரியர் ,இயக்குநர் கையில் இருக்கிற கதையைப் பொருத்தது .
விஜய் – நெல்சன் கூட்டணியில் தயாராகவிருக்கும் படத்தில் விஜய்க்கு இரட்டை கதாநாயகிகள் என்று மிகப்பெரிய நடிகைகளின் பெயரை ஊடகங்களில் பார்க்க முடிகிறது. அனிருத் இசை. மனோஜ் பரமஹம்ஸா கேமரா. சோவியத் ரஷ்யாவில் படப்பிடிப்பு. கதைக்களம் உளவுத்துறை தொடர்பானது.
அப்படியானால் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஸ்டண்ட் காட்சிகள் அமைந்ததாக வேண்டும். இதனால்தானோ என்னவோ அன்பறிவ் இரட்டையர்களை ஸ்டண்ட் மாஸ்டர்களாக அறிவித்திருக்கிறார்கள். விஜய் துப்பறிவாளராக வருகிறார் என்று சொல்கிறார்கள்.
படத்தை 90 நாட்களில் முடிப்பதற்கு திட்டம். ஆனால் கோவிட் 19 அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் தற்போது அதனுடைய மிரட்டல் அதிகமாகி வருகிறது. நடிகர் மாதவனையும் விட்டு வைக்கவில்லையே ராமா!
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாயகி பூஜா ஹெக்டே.
இவரும் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நாயகியாக சுல்தான் பட ராஷ்மிகா மந்தனா .
இருவருமே கட்டான மேனி அழகிகள்தான். அம்சமான கட்டைகள். ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைகிற வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் சொல்லவேண்டியவர்கள் அறிக்கையை தாக்கல் செய்யவில்லையே!