ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ,எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி ஆகியோர் நடித்திருக்கிற படம்தான் தலைவி .
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை கோர்த்து திரைப்படமாக தமிழ் ,தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடுகிறார்கள்.
முன்னர் மணிரத்னம் இயக்கி வெளிவந்த இருவர் படத்தில் மோகன்லால் எம்.ஜி.ஆராகவும் ,பிரகாஷ் ராஜ் கருணாநிதியாகவும் நடித்திருந்தார்கள். ஐஸ்வர்யாராய் ,தபூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
ஆனால் இந்த படம் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை. பல பிரச்னைகளையும் சந்தித்தது.
அந்த படத்தைப் போல இந்தப்படமும் பிரச்னைகளை சந்திக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.. கொரானா அலை மறுபடியும் வீசலாம் என்கிற எதிர்பார்ப்பினால் தேர்தல் முடிந்ததும் மறுபடியும் கட்டுப்பாடுகளை கொண்டுவர அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால்தான் ஓடிடியிலும் வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
தமிழ் ,தெலுங்கு இரண்டு மொழி தலைவியும் அமேசான் ,இந்தி தலைவி நெட்பிளிக்சிலும் வெளியாகின்றன. எந்த தேதியில் என்பது தெரியவில்லை.