99 பாடல்கள்.
ஏஆர் .ரகுமானின் தயாரிப்பு .கதையும் அவரே.!
இந்த புதிய படத்தின் ஆடியோ வெளியீடு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்த சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசினார்.
“நானே ரகுமான் சாரின் மிகப்பெரிய ரசிகன் .ஆனால் என்னை விட என்னுடைய அப்பா தீவிரமான ரசிகர். ஆஸ்காருக்கு முன்னதாக இருந்த ரகுமானுக்கும் ,ஆஸ்காருக்கு பிந்திய ரகுமானுக்கும் என்ன சார் வித்தியாசம் என்று ஒருதடவை ரகுமான் சாரிடம் கேட்டேன்.மிகவும் புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டுவிட்டதாக நான் நினைத்துக்கொண்டேன்.
அதற்கு அவர் மிகவும் சுலபமாக “வயது” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
நான் தற்போது ரகுமான் சாருடன் அயலான் படத்தில் இருக்கிறேன் .என்னுடைய கேரியரில் அடுத்த கட்டம் ” என்று சிவகார்த்திகேயன் பெருமையுடன் சொன்னார்.
நன்றி தெரிவித்து பேசிய ரகுமான் “தற்போது சூப்பர் ஸ்டாராக இருந்தும் இந்த சிறிய விழாவில் வந்து கலந்து கொண்டதற்காக நன்றி சிவா”என்று கூறினார் .