தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர் கார்த்தி. தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.இதற்கிடையே ரெமோ பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி அடுத்து நடிக்கவுள்ள புதிய படம் குறித்த திரைப்படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.கார்த்தி நடிப்பில் ஏற்கனவே கொம்பன் படத்தை இயக்கிய முத்தையாவுடன் மீண்டும் கிராமத்து கதைக்களமாக உருவாகும் புதிய படத்திற்காக கார்த்தி இணையவுள்ளார். இப் படத்தினை அவரது அண்ணன் சூர்யா தனது சொந்த படநிறுவனம் 2டி நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.