எப்படியாவது வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இன்றைய அரசியல்வாதிகள் பேசும் பேச்சுக்களை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும்
என்பதற்காக தமிழக முதல்வரின் தாய் மீது முந்நாள் நடுவண்
அமைச்சர் ஆ. ராசா அவர்கள் வீசியுள்ள பழிச்சொல்லை திமுக வில் உள்ளவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!
சொல்வதற்கே வாய் கூசும் அவரது தொடர்ச்சியான தரம் தாழ்ந்த பேச்சுக்கள் போல் மற்றவர்களும் பேசத் தொடங்கிவிட்டால் அதையும் இந்த மக்கள் கேட்டுக்கொண்டுதான் வாழ வேண்டுமா?
தலைமையில் உள்ளவர்கள் அவரது பேச்சினை கண்டிக்காததும், ஊடகங்கள் அது குறித்துப்பேச மறுப்பதும் தமிழக அரசியல் முழு கொள்ளை வணிகமாக மாறிப்போனதையே பறைசாற்றுகின்றன.
இப்படியே போனால் பகுத்தறிவுப் பாசறையில் பாடம் பயின்றதாக கூறிக்கொண்டு பெருந்தலைவர்களின் படங்களை இனி பயன்படுத்துவதில் எவ்வித நியாயமும் இருக்காது!
– *தங்கர் பச்சான்*