சென்னையை அடுத்துள்ள ஈ .வி.பி.ஸ்டுடியோவில் மிகப்பெரிய செட் போட்டிருக்கிறார்கள்.
கோவையில் உள்ள கொடிசீயாவில் மாநாடு நடப்பது போன்ற மிகப்பெரிய காட்சிக்காக போட்டுள்ள செட்..
வெங்கட்பிரபு -சிலம்பரசனின் ‘மாநாடு ‘படத்துக்கான இறுதிக்கட்ட ஷூட்டிங் என்கிறார்கள்.
‘முத்தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்துகிற மாநாடு என்கிறார்கள்.
கடனை உடனை வாங்கி மாநாடு கொட்டியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி.
சிலம்பரசனுக்கு ஜோடியாக கேரளநடிகை கல்யாணி பிரியதர்சன் நடித்திருக்கிறார்.யுவன் சங்கர் ராஜா இசை. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அரசியல் கலந்த படம். தமிழ்நாட்டுக்கு தேவையான படம்தான்.
சொல்லப்போவதை வெங்கட்பிரபு காமெடியாக சொல்லாமல் ,வழக்கமான அவரின் பாணியை விட்டு வெளியில் வந்து செவிட்டில் அறைவது மாதிரி சொன்னால் நல்லது.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றிருக்கிறது
சிலம்பரசனின் வெறி பிடித்த ரசிகர்கள் வெடிகளை வெடித்து அகலப்படுத்த தயாராக இருக்கிறார்கள்.