என்னம்மா இது காலங்கார்த்தாலேயே பிரச்னையை கிளப்புறே ?
“ஆண்கள் சட்டையில்லாம சிக்ஸ் பேக் காட்டுறபோது பெண்கள் நீச்சலுடையுடன் நிற்பது தப்பா?”
இப்படி கேட்பது விவரமான நடிகைதான்.டாப்ஸி !
லாஜிக்காக இருக்குல்ல.?
பெண்கள் தங்களின் தாய்மைக்கு அடையாளமாக இருக்கிற மார்பகங்களை பாதியாக மறைத்துக்காட்டினாலும் எதிர்ப்பு வருகிறது.
“வெட்கமாக இல்லையா ,இப்படி அவுத்துப்போட்டு வந்து நிக்கிறியே என்று கண்டிக்கிறார்கள். கேலி பண்ணுகிறார்கள். நக்கலடிக்கிறார்கள் .ஆனால் ஆண்கள் ஜட்டியுடன் தங்களின் ஜிம் பாடியை காட்டுகிறபோது மட்டும் எதிர்ப்பு இல்லையே ,ஏன் இந்த பாகுபாடு? “
இதுதான் டாப்ஸியின் முக்கிய வாதம்!
விவாதம் செய்வதற்கு இந்த கருத்து சரியாக இருக்கலாம்.
ஆனால்?
பயாலாஜிகல் ,ஹார்மோனல் உண்மைகள் இருக்கிறது என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது. ஆலயத்தின் பெண்கள் சிலைகளில் இருக்கிற கவர்ச்சி ஆணின் சிலைகளில் இருப்பதில்லை. செழிப்பான தொடைகள் பெண்களுக்கு.வலிமையான தொடைகள் ஆண்களுக்கு.! அங்கு பொதுவாக அழகுதான் ஆராதனை செய்யப்படுகிறது.
நிர்வாணம் என்பது ஆண் , பெண் இரு பாலாருக்கும் பொதுவானது இல்லை.
நம் நாட்டில் கலாசார பெருமை புதை குழிக்கு போன பிறகு டாப்ஸியின் கருத்தை ஏற்கலாம். அந்த நாளும் வரும். அதுவரை பொறுமை காக்க!