ஆந்திராவில் வெளியாகும் பிரபல கிரேட் ஆந்திரா இணையத்துக்கு நடிகை தேஜஸ்வி மடிவடா பேட்டி அளித்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் துணிச்சலுடன் அவரது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
விரைவில் வரவிருக்கிற படம் கமிட்மென்ட் . உதடுகளை முத்தமிடும் லிப்லாக் காட்சியும் இருக்கிறது.
“முதன்முதலாக உண்மையாகவே லிப்லாக் பண்ணி நடித்திருக்கிறேன். உண்மையான முத்தத்தின் உணர்வு. நல்ல அனுபவம். முத்தமிடுவதைப்போல பொய்யாக எடுக்கப்பட்ட காட்சிகளில் இருந்து வேறுபட்டு இருந்தது. உண்மையான முத்தம் மிகப்பெரிய அனுபவம் .நான் முத்தமிட்ட அந்த நடிகரை நான் நன்கறிவேன்.
நான் தெலுங்கு பெண். எனக்கும் கல்யாண ஆசை இருந்தது. ஆனால் முதல் கல்யாண புரபோசலே தோல்வியில் முடிந்தது. இதனால் நான் யாத்திரை செல்வதில் நாட்டம் உள்ளவளாகிவிட்டேன்.
தற்போது மறுபடியும் நடிக்க வந்திருக்கிறேன்.நடிகையாக தொடர்வதற்கு கல்யாணம் ஒரு தடை யாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்பது இருக்காது.
கல்யாணம் இல்லாமல் பாய் பிரண்டுடன் வாழ்வதில் எந்த பிரச்னையும் இல்லை. அதில் தவறும் இல்லை.நான் சந்நியாசினி இல்லை.அதனால் எனக்கு இப்போது பாய் பிரண்ட் இருக்கிறார்.
இதற்கு முன் இரண்டு பேருடன் டேட்டிங்கில் 10 வருடங்கள் இருந்திருக்கிறேன். இப்போது நான் தெளிவாகிவிட்டேன்.
நான் மென்மையானவள். சிலர் ஆபாசமாக திட்டுகிறார்கள்.அவர்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை. நான் சரியான வழியில்தான் செல்கிறேன். நான் விரும்புகிற வாழ்க்கையில் வாழ்வதில் என்ன தவறு?”என்று கேட்கிறார்.