புகழ் பெற்ற இயக்குநர்கள் என்றால் ஏனைய சக இயக்குநர்களை அவ்வளவாக மதிப்பதில்லை. இது காலம் காலமாக நடந்து வருகிற தவறான போக்கு. இதைப்பற்றி சீனியர்களும் கவலைப்படுவதில்லை.. ஜுனியர்களும் வெளியில் சொல்வதில்லை .காரணம் வாழ்க்கையுடன் கலந்த வாய்ப்பு பிரச்னை.
தற்போது பிரபல ஒளிப்பதிவாளரும் ,இயக்குநருமான கே.வி. ஆனந்தை, மணிரத்னம் அவமதித்துவிட்டாராம். கோலிவுட்டில் பரபரப்பாக சுற்றி வருகிற செய்தி.
என்ன விவரம்?
மணிரத்னம், ஜெயேந்திரா ஆகிய இயக்குநர்கள் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி வகை படம்தான் ‘நவரசா’
கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இயக்குவார்கள் என்பதாக சொன்னார்கள்.
இந்த ஆந்தாலஜி படங்களில் சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
ஒளிப்பதிவாளர்களாக சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியன், மனோஜ் பரஹம்சா, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோரும்,ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான் ஆகியோர் இசையமைப்பாளர்கள் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் என்ன சிக்கலோ தெரியாது . பொன்ராம் படம் எடுத்த பின் நிராகரிக்கப்பட்டது. ஹலிதா சமீம் எடுக்குமுன்பே விலகிக் கொண்டார்.
இயக்குநர் கே.வி.ஆனந்தும் விலகிவிட்டார்.
இந்த படத்தின் படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மோசமான கருத்தினை மணிரத்னம் சொல்லிவிட்டாராம். அது கே.வி.ஆனந்த் காதுக்கும் பொய் விட்டது.
அதனால், படத்தொகுப்புப் பணிகளைப் பாதியிலேயே விட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டாராம் கே.வி.ஆனந்த்.
என்ன இருந்தாலும் சக கலைஞரை புண் படுத்துவது மார்க்சியவாதியான மணிரத்னத்துக்கு அழகல்ல என்கிறார்கள் கோலிவுட்டில்.!