இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான பால்கே அவார்ட் தமிழ்ப்பட நடிகரான ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
விருது கிடைத்த ரஜினியை பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்தியிருக்கிறார்.
“இன்றும் என்றும் இனிய நண்பரும் – தமிழ்த்திரையுலகில் தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்த் அவர்களுக்கு, ‘தாதா சாகேப் பால்கே விருது’ கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
எப்போதோ அவருக்கு இந்த விருது தரப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத் தரப்பட்டுள்ளது.
நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் இலக்கணமான ரஜினி அவர்களை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
அவரது கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடரட்டும். தமிழ்த்திரை, நண்பர் ரஜினி அவர்களால் செழிக்கட்டும்!”என்று கூறியிருக்கிறார்.
தமிழக முதல்வர் பழனிச்சாமி டிவிட்டரில் வெளியிட்டிருக்கிற பதிவில் கூறி இருப்பதாவது :
” தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது.
தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.