தெலுங்கு திரையுலகின் ‘மெகா’ நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்கள் சிரஞ்சீவியும், நாகார்ஜுனாவும் இன்றளவும் தங்களுக்கென தனித்தனியே ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்து கொண்டுள்ளனர் தற்போது, இவர்களது வாரிசுகளும் (ராம்சரண்,நாகசைதன்யா) நடிக்க வந்த பிறகும், தொடர்ந்துகதாநாயகர்களாவே நடித்து வருகின்றனர்.
இருவரும் நீண்ட கால நண்பர்கள்.இந்நிலையில் இயக்குநர் அஹிஷோர் சாலமன் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி உள்ள ‘வைல்டு டாக்’ படத்தில் ஹீரோவாக நாகார்ஜுனா நடித்துள்ளார். இப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வைல்ட் டாக் திரைப்படத்தின் வெளியிட்டை முன்னிட்டு நாகார்ஜுனாவின் டென்ஷனை குறைக்க நடிகர் சிரஞ்சீவி சமைத்த நான்வெஜ் உணவு பிளேட்டை கையில் வைத்தபடி போஸ் கொடுத்து டோலிவுட் ரசிகர்களையும் பிரபலங்களையும் வெறுப்பேற்றி உள்ளார் நாகார்ஜுனா. இருவரும் இணைந்து எடுத்துள்ள இப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.