ராக்கெட்ரி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமெடுத்துள்ளார் நடிகர் மாதவன்.இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியான நம்பி நாராயணனை அழிக்க அவருக்கு தேச துரோகி என பட்டம் கட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்ற உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட நாவலை தழுவி உருவாகியுள்ள இப் படத்தை நடிகர் மாதவன் இயக்கி நம்பி நாராயணனாகவே நடித்துள்ளார்.
பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன் இந்த படத்தில் மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் என பிரபலங்கள் பலரும் அந்த டிரைலரை தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த டிரைலரில் இடம்பெறும் ஒவ்வொரு வசனங்களும் காட்சிகளும் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம் . ‘ஒரு நாயை அழிக்க அதற்கு வெறிநாய் என பட்டம் கட்டினாலே போதும்’ என்றும், அது போல ஒரு மனுஷனை தலை தூக்க முடியாத அளவுக்கு அடிச்சி கொல்லணும்னா அவனுக்கு தேச துரோகின்னு பட்டம் கொடுத்தா போதும் என இப்பட த்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள நடிகர் சூர்யா பேசும் அனல் தெறிக்கும் வசனங்கள் கோடைவெயிலின் உச்சம். இந்த கோடையில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.