கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அங்கு தனது பிரச்சாரத்தை மிக மும்முரமாக செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் மற்றும் கமலின் அண்ணன் மகளும். இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான நடிகை சுஹாசினி இருவரும் கமலுக்காக அங்கு தெருத்தெருவாக, தாரை தப்பட்டை அதிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
பிரசாரத்தின் போது இடை இடையிடையே குத்தாட்டம் ஆடி வாக்கு சேகரித்து வருகின்றனர்.இது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது.