ஏப்ரல் 6 ,2021.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள்.
அதிகாலையிலேயே தல அஜித் ,மனைவி ஷாலினியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து விட்டார்
வழக்கம் போல வரிசையில் நின்றார். அப்போது அங்கு வந்திருந்த வாக்காள ரசிகர்களில் பலர் அவருடன் செல்பி எடுக்க முயன்றனர்.
ஒரு தனி மனிதனின் உணர்வினை புரிந்து கொள்ளாமல் தொல்லைகள் தருவது நமது ரசிக கண்மணிகளின் வழக்கம் -பழக்கம். அது அன்று தொட்டே வளர்ந்து கொண்டிருக்கிறது.
பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா….
அந்த ரசிகரின் செல்லை பறித்து வைத்துக் கொண்டார் அஜித்.
அதன் பின்னர் போலீசார் தனியாக அஜித்தை அழைத்து சென்று வாக்களிக்க வைத்தனர்.
எச்சரித்த பின்னர் உரியவரிடம் செல் ஒப்படைக்கப்பட்டது என்பதை சொல்லத் தேவையில்லை.
அதிகாலையிலேயே மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய மகள் ஸ்ருதிஹாசன் ,அக்ஸ்ரா ஹாசன் இருவருடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
பின்னர் உடனடியாக கோவைக்கு பறந்து சென்று விட்டார். அங்கு கோவை தெற்கு தொகுதி ,மற்றும் சிங்காநல்லூர் ,கோவை வடக்கு தொகுதி ஆகிய இடங்களுக்கு சென்று வாக்கு சாவடிகளை பார்வையிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இன்று காலையிலேயே சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருடன் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனும் உடன் வந்து, வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினர்
நடிகர்கள் சிவகுமார் ,கார்த்தி ,சூர்யா, ஜோதிகா ஆகியோர் ஸ்ரீநகரில் உள்ள இந்தி பிரசார சபாவில்அமைந்துள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார், நடிகை ராதிகா ஆகியோர் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில்உள்ள வாக்கு மையத்தில் வாக்களித்தனர்.
நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வடபழனியில் உள்ள கார்த்திகேயன் பள்ளியில் உள்ள வாக்கு மையத்தில் வாக்களித்தார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா அண்ணாநகரில் உள்ள நடேசன் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் ஆர்ஜே. பாலாஜி கோட்டூர்புரத்தில் உள்ள நாடார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் .நடிகர் பிரபு விக்ரம் பிரபு ராம்குமார் ஆகியோர் நகரிலுள்ள தக்கர்பாபா வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
நடிகர் விஜய் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் சைக்கிளில் வந்து வாக்களித்தார். கூட்டம் திரண்டதால் லேசாக தடியடி நடத்தப்பட்டது திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ,மருமகள் ஆகியோரும் வாக்களித்தனர்.
நடிகர் சத்யராஜ் நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகம் அருகே இந்து அறநிலையத் துறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் அருண்விஜய் ஈக்காடுதாங்கல் கிரிஸ்டியன் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நடிகர் நாசர் ,கமீலா நாசர் மற்றும் அவரது குடும்பத்தினர் வளசரவாக்கம் தேவி அகாடமி அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர் .
இயக்குனர் பாரதிராஜா தி நகர் இந்தி பிரசார சபாவில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோர் பெசன்ட் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.