“கோவை தெற்குத் தொகுதியில் வாக்களிப்பதற்கு பா.ஜ.க. பணம் கொடுத்ததாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.
“பணம் வழங்குவதற்காக பிஜேபியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்தார்கள் .அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.”என்றுகமல் கூறி இருக்கிறார். இதே தொகுதியில் போட்டியிடுகின்ற காங்கிரஸ் வேட்பாளர் மயூரா இதைப் போன்ற குற்றச்சாட்டை கூறி சாலை மறியல் செய்தார்,
பிஜேபி வேட்பாளருக்கு இது மூன்றாவது தேர்தல். சென்னையிலும் ,கோவையிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் வானதி சீனிவாசன் .இந்த முறை தனக்கு வெற்றி நிச்சயம் என்று உறுதியாக சொல்கிறார்.
“காங்கிரஸ் ,மக்கள் நீதி மய்யம் இரு கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. என்னுடைய தொண்டர்களை இழிவு படுத்துவதைப்போல இருக்கிறது.”என்று வானதி கூறி இருக்கிறார்.