தேர்தல் நடைமுறை விதிகளை அப்பட்டமாக மீறியதாக அதிமுக ,பா.ஜ.க. வேட்பாளர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் எந்த வேட்பாளரின் சின்னமும் இருக்கக்கூடாது சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படவேண்டும் ,வாக்காளர்களுக்கு கட்சிகள் வழங்குகிற சிலிப்புகளில் சின்னமோ கட்சிக்கொடியோ இருக்கக்கூடாது என்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள்.
ஆனால் மஞ்சள் வண்ணம் ,பச்சைக்கலர் பார்டருடன் தாமரை சின்னமும் உள்ள புடவையை அணிந்து கொண்டு வாக்குச்சாவடிக்குள் கோவை தெற்கு வேட்பாளர் வானதி சீனிவாசன் வந்ததாக மய்யம் ,காங்கிரஸ்,நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் புகார் கூறி வருகிறார்கள்.
இதைப்போன்ற குற்றச்சாட்டு அதிமுக வேட்பாளர் அமைச்சர் மா.பா பாண்டிய ராஜன் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. அதிமுக கட்சி கொடியை போன்ற துண்டில் இரட்டை இலை சின்னம் இருந்ததாம்.
புகாரில் உண்மை இருந்தால் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா என்று பொதுஜனம் கேட்கிறார். பதில் என்ன?