அரசியலில் ஒரு அதிரடியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற திரைப்படம் தலைவி .
ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவிய பயோபிக் படம். இயக்குநர் விஜய் இயக்கத்தில் வளர்ந்திருக்கிற படம். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா முக்கிய வேடமான ஜெயலலிதாவின் கேற்கடரில் நடித்திருக்கிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்திருக்கிறார்.
வருகிற 23 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இடியாப்ப சிக்கல் மாதிரியாக செய்திகள் வருகின்றன.
கங்கனாவுக்கு டப்பிங் பிரச்னை கிடையாது.அவரால் தமிழ் பேச முடியாது. வழக்கம் போல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்தான் பேசியிருக்கிறார்.
ஆனால் பேசியபடி சம்பளம் தரவில்லை என்பதால் அரவிந்தசாமி உள்ளிட்ட முக்கிய சிலர் டப்பிங் பேசவில்லையாம். அரவிந்தசாமியை சமாதானப்படுத்துகிற வேலையில் இறங்கியிருக்கிறார்களாம். யாரும் மிரட்டினார்களா என்பதும் தெரியவில்லை.
சம்பளம் கொடுக்காமல் டப்பிங் பேச முடியாது என்று டப்பிங் கலைஞர்களும் மறுத்து விட்டதாக சொல்கிறார்கள்.
அடப்பாவமே…ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை!