சிலம்பரசனின் நண்பர்கள் வட்டத்தில் நடிகர் ஜெய்க்கு முக்கிய இடம் இருக்கிறது.
ஒரு காலத்தில் நடிகை அஞ்சலியுடன் காதலில் ஜெய் கட்டுண்டு கிடந்தபோது சில பல அறிவுரைகளை சிலம்பரசன் வழங்கியதாக சொல்வார்கள்.
ஆனாலும் அந்த காதல் சட்டென மாறிய வானிலையாக கடந்து சென்றுவிட்டது.
ஜெய் மாதிரியானவர்களால் கேர்ள் ஃ பிரண்ட் இல்லாமல் இருக்க முடியாது. அவர் சும்மா இருந்தாலும் நட்புகள் சுற்றியே வந்து கொண்டிருக்கும். அது அவர்களது சுழி.!
சும்மா இருந்தாலும் சுழி இருக்கவிடாது என்பார்கள் .
இவ்வளவு முன்னுரை எதற்காக? சொல்லவந்ததை சுருக்கமாக சொல்லித்தொலை என்கிறீர்களா?
ஜெய்க்கு பிறந்தநாள். சிறப்பு விருந்தினர் இயக்குநர் சுசீந்திரன். கொரானா காரணாமாக கூட்டம் சேர்க்கவில்லை. சுசீந்திரன் வந்ததும் கேக் வெட்டி விழாவை கொண்டாடி விட்டார்கள்.
அடுத்து வந்தவர் ஆருயிர் நண்பர் சிலம்பரசன்.கட்டிப்பிடித்தல் ,முத்தங்கள், வாழ்த்துகள் பரிமாற்றம் வழக்கம் போல ஒருமையில் உரிமையுடன் அளவளாவல் என நிகழ்ந்தது.
ஒருவர்க்கொருவர் கேக் ஊட்டிக்கொண்டனர்.அன்றைய இரவு மகிழ்ச்சியாக முடிந்தது.