படப்பிடிப்பில் நடந்த விபத்தினால் நடிகர் என்னுயிர்த் தோழன் பாபு இன்று வரை படுத்த படுக்கையில்.! கிட்டத்தட்ட 40 ஆண்டுகள்.!
முன்னாள் அமைச்சர் க.ராசாராமின் சகோதரி மகன். பாரதிராஜாவின் அறிமுகம் . ஆதரவாக இருந்த சகோதரனும் உயிருடன் இல்லை.
அம்மா மட்டுமே ஆதரவு. கணவர் இறந்து விட்டார் .உற்றமும் கவனிக்கவில்லை. சுற்றமும் அனுதாபமுடன் அவ்வப்போது சில பல உதவிகள்.!
எழ முடியாது ,உட்காரமுடியாது. பிறகெப்படி நடக்க முடியும்.? படுத்த படுக்கையில் இயற்கை கடன்களை கழித்தல்.
இவரது பரிதாப நிலையை சுட்டிக்காட்டி உதவும்படி கேட்டுக்கொண்டது நமது சினிமா முரசம்தான்.!
அது வரை என்னுயிர்த்தோழன் பாபு உயிருடன் இல்லை என்பதாகவே நினைத்திருக்கிறார்கள்.
செய்தி அறிந்த உடனேயே தொடர்பு கொண்டார் இயக்குநர் ,நடிகர் பொன்வண்ணன்.
“பாபுவுக்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் “என நம்மிடம் சொன்னார்.
அவருக்கு ஒருவர் பேட்டரி வீல் சேர் வழங்கியிருப்பதாக பாபு நம்மிடம் சொன்னார்.
இன்று காலையில் சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் சுல்தான் நன்றி அறிவிப்பு விழாவுக்கு வந்திருந்த பொன் வண்ணன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
நம்மை பார்த்ததும் உற்சாகமுடன் அழைத்த பொன்வண்ணன் “இனி என்னுயிர்த் தோழன் பாபுவுக்கு பிரச்னை இல்லைண்ணே ! நண்பர்கள் உதவியுடன் 15 லட்சம் ரூபாயை பாபுவின் பெயரில் வங்கியில் செலுத்தியிருக்கிறோம். மாதம் தோறும் கணிசமான தொகை வரும் கஷ்டப்படவேண்டியதில்லை” என மகிழ்ச்சியுடன் சொன்னார்.
உச்ச நடிகர்களுக்கு இல்லாத கருணை மனம் இவர்களுக்கு இருக்கிறதே என்கிற பெருமிதம் நமக்கு.!