கலைப்புலி தாணுவின் பிரமாண்டமான தயாரிப்பில் நாளை ( 9 ஆம் தேதி.) வெளியாகிறது கர்ணன் .
இது புராணப்படம் இல்லை. சமூகம் சார்ந்த படம் .இயக்குநர் மாரி செல்வராஜ் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
தேசிய விருது பெற்ற தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிற படம். அதிரடியான வசனங்களை எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்த படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு உலக அளவில் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த படத்தில் லால் ,நட்டி ,யோகிபாபு ,ரஷிஷா ,கவுரி லட்சுமி பிரியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
தனுஷின் ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கிறார்கள். தியேட்டர்களிலும் முன் பதிவு அமோகமாக இருக்கிறது.