கொரானா கொடிய தொற்று கேரள முதல்வரையும் விடவில்லை. சமத்துவ மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமாரையும் விட்டு வைக்கவில்லை .
அவர்கள் விரைவில் குணம் பெற வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் .
“கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள்
முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா.

இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட. ” என பதிவு செய்திருக்கிறார் .