மதத்தின் பெயரால் ராஜபோக வாழ்க்கையில் மிதந்து கொண்டிருப்பவர்கள் அந்தந்த மதங்களுக்கு அவர்களே தலைவர் என்று சொல்லிக்கொள்கிற பொய்யர்கள் , போலிகள்தான்!
இவர்களை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை. அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பதும் இல்லை.
கைலாஸா நாட்டின் அதிபதி என்று தன்னை சொல்லிக்கொள்கிற நித்தியானந்தா மீது பல வழக்குகள் உண்டு. நடிகை ரஞ்சிதாவுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ சன் தொலைக்காட்சியில் வெளியான பிறகு ஆசிரமத்தை விட்டு வெளியேறினார் .இவரிடம் மத்திய அரசின் பிஜேபி மூத்த அமைச்சர்கள் ஆசிர்வாதம் வாங்கிய படங்களும் வெளிவந்தன. பல வழக்குகள் தொடர்பாக இவரை தேடிய நிலையில் நாட்டை விட்டே தன்னுடைய குழுவினருடன் வெளியேறிவிட்டார்.
ஒரு தனி தீவை வாங்கி அதை கைலாஸா நாடு என்பதாக அறிவித்து தனி அரசாங்கமே நடத்தி கொண்டிருக்கிறார். அவர் அறிவித்த தனி ரிசர்வ் வங்கியும் இருக்கிறது . இந்த கைலாஸா நாடு எங்கிருக்கிறது என்பது இந்திய அரசுக்கு தெரியவே தெரியாது என்பதுதான் மிகப்பெரிய வேடிக்கை.
நித்தியானந்தா தன்னை சிவன் ,முருகன் என பல வேடங்களில் தங்க நகைகளால் அலங்கரித்துக்கொண்டு வீடியோ ,புகைப்படங்களை வெளியிடுவார்.
அண்மையில் சாட்சாத் அந்த ஏழுமலையானாகவே வேடம் தரித்து அசத்தி விட்டார்.சைவத்தை பரப்புவதே தன்னுடைய கடமை என சொல்லிக்கொண்டிருந்த இவர் வைணவ கடவுளாக காட்சி தந்திருப்பது வியப்பாக இருக்கிறது.
அதிலும் விபூதியும் நாமமும் கலந்து மதங்களை ஒன்றிணைத்திருக்கிறார் இந்த சர்ச்சை சாமியார்.
ஒருவேளை சத்குரு ஜக்கிக்கு எதிரான அவதாரமாக இருக்குமோ?
ஆனால் இந்த மாற்றத்துக்குப்பின் எதோ ஒரு ரகசியம் இருக்கிறது.