நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அச்சத்தை ஏற்படுத்து வகையில் உயர்ந்து வரும் நிலையில், அமீர் கான், மாதவன், சூர்யா, அக்ஷய் குமார், நிவேதா தாமஸ், ஐஸ்வர்ய லட்சுமி, ரன்பிர் கபூர், ஆலியா பட், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சினிமா பிரபலங்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.இந்நிலையில் டைரக்டரும், நடிகருமான சுந்தர்.சி.,க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்த தகவலை அவரது மனைவியும் நடிகையுமான குஷ்புதனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளரான தனது மனைவி குஷ்புவிற்காக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார் சுந்தர்.சி.என்பது குறிப்பிடத்தக்கது.