பாபநாசம் படத்தில் கமலுக்கும், தர்பார் படத்தில் ரஜினிக்கும் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ் . இவர் சமீபத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதையடுத்து தான் தனிமையில் இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பலரும் நிவேதா தாமஸ் விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும் பிரார் த்தனைகளை செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.இந்நிலையில், முகத்தில் மாஸ்க், கையில் கிளவுஸ் அணிந்தபடி தியேட்டர் ஒன்றிற்கு சென்று,தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வக்கீல் சாப்’ படத்தை ,கடைசி வரிசையில் நின்றபடி நிவேதாதாமஸ் படத்தை பார்த்துள்ளார்.இப்புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும்என இஷ்டத்திற்கு அறிவுரை வழங்கி விட்டு இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளலாமா என நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் நிவேதா தாமஸோ,, தான் ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும் அதனால் தான் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தேன். இது பொறுப்பில்லாத செயல் இல்லை. இது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
I live for these moments…
Maatalu levu ♥️#VakeelSaab pic.twitter.com/vFWzdWJYHI— Nivetha Thomas (@i_nivethathomas) April 10, 2021












