‘அண்ணாத்த’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.
இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.இப்புகைப்படங்களா மற்றும் வீடியோக்கள் இணைய தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பின்போது சிறுத்தை சிவா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளது.
இதில் ரஜினிகாந்த் இளமை தோற்றத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள், ‘தலைவர் வேற லெவல்’ என பதிவிட்டு வருகின்றனர்.