தமிழில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்கேரள நடிகை ரஜீஷா விஜயன் . முதல் பட த்திலேயே தனது அழுத்தமான நடிப்பால் தமிழக ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள ரஜீஷா விஜயன் தனது திரையுலக பயணம் குறித்து அளித்துள்ள பேட்டி .
கே; தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது குறித்து சொல்லுங்களேன் ?
பதில்; ” மலையாளத்தில் முன்னணி கதாநாயகி நடிகையாக நடித்து வந்தாலும் எனக்கு தமிழிலும் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்பது ஆசையாக இருந்தது.வாய்ப்புகளும் வந்தது. ஆனால் நல்ல கதைக்காக காத்திருந்தேன். நான் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து அப்படியே அசந்துட்டேன். மிகவும் திறமையான நடிகர் அவர் அவருக்கே நான் ஜோடியாக இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கே; கர்ணன் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?
பதில்: ‘பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது சின்ன விபத்து ஏற்பட்டு காலில் கட்டு போட்டிருந்தேன். அப்போது தான் கர்ணன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நான் நடித்த ஜூன் படத்தைப் பார்த்துதான் மாரி செல்வராஜ் இப்படத்தில் நடிக்க என்னை அழைத்தார். தாணு சார் அலுவலகத்தில் தான் கதை கேட்டேன். கதை கேட்டதும் மிகவும் பிடித்துவிட்டது. உடனடியாக ஓ.கே சொல்லி விட்டேன்.
கே; ஒவ்வொரு நடிகைக்கும் அறிமுகம் என்பது விதவிதமான உடைகளுடன் அல்டரா மாடர்ன் பெண்ணாக நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். ஆனால் நீங்கள் மேக்கப் இல்லாத கிராமத்து பெண்ணாக நடித்தது குறித்து?
பதில்: இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதுதான் முக்கியம். உடையோ அலங்காரமோ அல்ல. அதே சமயம் என் உடல்வாகுக்கு பொருத்தமான உடை தான் அணிந்து நடிக்க முடியும். நான் வெறும் களிமண் மாதிரி. அதை அழகாக உருவாக்குவது இயக்குனரின் கைகளில் தான் இருக்கிறது. படத்திலேயே எனக்கு கொஞ்சமும் மேக்கப் கிடையாது. மேலும் நடிப்பு இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக இயக்குனரின் அறிவுரைப்படி படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிகிட்டத்தட்ட அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்’
கே: உங்களுக்கு விளையாட்டை மையப்படுத்தும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் அதிகமா?மலையாளத்தில் நீங்க நடிக்க வந்த 4 வருடத்தில் 2 படங்களில் நடித்து இருக்கிறீர்களே?
பதில்:அப்படி ஒன்றும் இல்லை. ஒரு வருடத்தில் 2 படங்கள் தான் விளையாட்டை மையப்படுத்தி வருகிறது. பாக்கி எல்லாம் வேற கதையம்சம் உள்ள படங்கள் தானே. 4 வருடத்தில் 2 ஸ்போர்ட்ஸ் படங்களில் நடித்தது என்னோட லக் என்று தான் சொல்வேன் அது தானாக அமைந்தது.இரண்டு படங்களின் கதாபாத்திரங்களும் வித்தியாசமானவை .
கே: நீங்க நடிகையாக வேண்டும் என்பது உங்களின் சிறுவயது கனவாக இருந்ததா?
பதில்:என்னோட மனசுக்குள் நடிப்பு ஆசை எங்கேயோ ஒரு மூலைக்குள் சின்னதா கிடந்தது ஆனால் நமக்கு எங்கே நடிப்பு வர போகுதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஏன்னா, நான் நல்லா படிப்பேன். ஸ்கூல் நாட்களில் என்னோட கனவு டாக்டரா ஆகணும்னு தான்.ஆனால் அப்பவே ஸ்கூலில் டான்ஸ், ஸ்போர்ட்ஸ், என எல்லாத்தையும் கத்துக்கிட்டு தான் இருந்தேன். 12 வது வகுப்புக்கு அப்புறம் மெடிக்கல் என்ட்ரன்ஸ் கிடைச்சதுக்கு அப்புறம் இதுவல்ல நம் இலக்கு என எனக்குள் ஒரு இண்டீயுசன் மாதிரி வந்துருச்சு அப்ப ஜர்னலிசம் கோர்ஸ் பண்ண போயிட்டேன்.அதிலும் எனக்கு சின்ன முரண்பாடு ஏற்பட்டது .அப்பறம் வி.ஜெ வா கொஞ்சம் மாறினேன்.அதுல கொஞ்சம் திருப்தி ஏற்பட்டது. பலரும் என்னை நடிக்கலாமே என்றனர்.நல்ல கதை கேரக்டர் கிடைத்தால் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன் 2016-ல் மலையாளத்தில் ‘அனுராக காரிக்கின் வெல்லம்’ பட வாய்ப்புகிடைத்தது..இப்போ உங்கள் முன் நானும் ஒரு நடிகையாக நிற்கிறேன்.
கே; தமிழ் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் உண்டா?
பதில் நிச்சயமா. கேரளாவில் ஒரு பெரிய நடிகர்களின் படங்கள் எத்தனை தியேட்டரில் வெளியாகுமோ அதே அளவு பெரிய தமிழ் நடிகர்களின் படங்களும் திரையரங்குகளில் வெளியாகும். எனவே தமிழ்ப்படங்கள் பார்ப்பதில் அங்கு ஆச்சரியமில்லை கவுதம்மேனன் பாலா,வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் படங்களும் அங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கே: நடிகைகள் தங்களது அழகை மேலும், மேலும் மெருகேற்றிக்கொள்ள காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்களே இது சரியா?
பதில்: இது எல்லாம் முற்றிலும் தவறு என நான் சொல்லிய காலம் இருந்தது.ஆனால், இப்போது அந்த எண்ணம் மாறி விட்டது.ஒருத்தருக்கு சரின்னு படற விஷயம் இன்னொருத்தருக்கு சரின்னு படாது.ஆனால் அவரவர்களுக்கு என ஒரு சாய்ஸ் உண்டு. நான் எப்படி இருக்க வேண்டும், என் தேவை என்ன? என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நம் தோலின் நிறம் என்பது ஒரு விஷயமே இல்லை. நான் அதனாலேயே ஃபேர்னஸ் கிரீம் விளம்பரபட வாய்ப்பை ஏற்கவில்லை . எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் அழகு தான்.நடிகைக்கு ‘சைஸ் ஜீரோ’ தான் அழகு என்பதல்ல. அதுபோல ஹீரோவுக்கு சிக்ஸ்பேக் தான் ‘ஹேண்ட்சம்’ என்பதும் அல்ல .எல்லாமே அழகுதான் அதற்காக காஸ்மெட்டிக் சர்ஜரி மேற்கொள்வது தவறு என அர்த்தம் என்பதும் இல்லை .அது அவரவர் விருப்பம். நான் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடிக்க வேண்டும் என்றால், நானும் சிலவற்றை அழகுக்காக செய்துதான் ஆகவேண்டும்.