நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் அவரது முன்னாள் மனைவி ரஜினிக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது. ( ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் நடராஜ் மகள் தான் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது ). இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வந்தார் விஷ்ணு விஷால். இருவரும் காதலித்து வருவதை அவரது நண்பர்களும் உறுதிப்படுத்தினர் தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருமே தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.
இந்நிலையில் விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா ஜோடி தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:”எங்கள் குடும்பங்களின் ஆசிர்வாதத்துடன் எங்கள் திருமணம் குறித்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நாங்கள் ஏப்ரல் 22-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் எங்கள் மீது பொழிந்த அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு உங்களுடைய ஆசீர்வாதங்களை வேண்டுகிறோம்”.