இப்பெரும் ஆளுமைகளை இணைத்து,பென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார் டாக்டர் .ஜெயந்திலால் காடா.
இன்றைய காலகட்டத்தில் இந்திய அளவில் மிகப்பிரமாண்டமான இயக்குநர், நட்சத்திர நடிகர் கூட்டணி இது தான்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. காட் ப்ளஸ் என்டெர்டெவ்யின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறார்கள்.
இயக்குநர் ஷங்கர் படம் குறித்து கூறியதாவது…
இந்தி மொழியில் “அந்நியன்” படம் உருவாக மிகச்சிறந்த நடிப்புதிறன் கொண்ட, திரையினில் ரசிகர்களை கட்டிப்போடும் திறன் கொண்ட வசீகரம் மிக்க நடிகர் வேண்டும்.
அந்த வகையில் ரன்வீர் சிங் இன்றைய தலைமுறையின் இணையற்ற நடிகராக, தன் நடிப்பு திறனால் எக்காலத்திலும் அழியாத பாத்திரங்களால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அவருடன் இணைந்து இந்தியாவெங்கும் உள்ள ரசிகர்களுக்காக “அந்நியன்” படத்தை மீளுருவாக்கம் செய்வது மிக மகிழ்ச்சி. தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற இந்த அழுத்தமிகு கதை, இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவரும் எனும் நம்பிக்கை உள்ளது. ரன்வீரும் நானும் இப்படத்தினை இந்தி மொழியின் ரசிகர்களுக்காக, அந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவாறாக கதையினை மாற்றம் செய்திருக்கிறேன்.
நடிகர் ரன்வீர் சிங் படம் குறித்து கூறியதாவது…
இயக்குநர் ஷங்கர் அவர்களின் அற்புதமான கற்பனையில் உருவாகும் படைப்பில் வாய்ப்பு கிடைத்ததை பெரும் ஆசிர்வாதமாகவே கருதுகிறேன். நாம் நினைத்து பார்த்திராத பல அரிய சாதனைகளை திரையில் நிகழ்த்தி காட்டியவர் அவர். என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து படம் செய்வேண்டுமென்பது எனது கனவு. இப்படம் ஒரு பெரிய மேஜிக்கை நிகழ்த்துமென உறுதியாக நம்புகிறேன். “அந்நியன்” போன்ற ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது, எந்த ஒரு நடிகருக்குமே பெரிய வரமாகும். இந்திய சினிமாவில் நான் மிகவும் மதிக்கக்கூடிய ஆளுமையான நடிகர் விக்ரம் அவர்கள் எவராலும் நிகழ்த்த முடியாத, மிகச்சிறந்த நடிப்பை இப்படத்தில் தந்திருந்தார். அவரை போல் நடிப்பது கடினம். வாழ்வில் கிடைத்திராத அரிய கதாப்பாத்திரம் இது . என் முழு உழைப்பையும் தந்து இந்த கதாபாத்திரத்தில் ரசிகர்களுடன் இணையும் மேஜிக்கை நிகழ்த்துவேன் என நம்புகிறேன். இயக்குநர் ஷங்கர் அவர்கள் ஒரு வரலாற்று ஆளுமை அவருடன் பணிபுரிவதை, மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும்”என்கிறார்..