ஆர்டிகிள் 15.
இந்தி பேசிய படம்.
இந்த படத்தின் கருத்து ,சமகால அரசியலைப் பேசுகிறது. சாதிய வன்முறையைப் பேசுகிறது ,பெண்ணுரிமை பேசுகிறது, பிறகென்ன இதை தமிழில் எடுத்தால் என்ன ,துணிச்சலான முன்னெடுப்பு, முயன்று பார்க்கலாமே என்று இயக்குநர் அருண் ராஜா காமராஜ் நினைத்தபோது முன் வந்து நின்றார் உதயநிதி ஸ்டாலின். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க முன் வந்தது.
இதே நேரத்தில் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் உதயநிதி நடித்து வந்தார்.
தேர்தல் வந்தது.மகிழ்திருமேனியின் படம் தாமதமாகி விட்டது. .ஏனெனில் உதயநிதி வேட்பாளராகி விட்டார்.
இதனால் அருண்ராஜா காமராஜ் படத்தில் நடிப்பாரா உதயநிதி என்கிற சந்தேகம் வந்தது.
ஆனால் சட்ட மன்ற உறுப்பினராகிவிட்டால் ஆர்டிகிள் 15 மொழி மாற்று படத்தில் நடிக்க இயலாமல் போய்விடலாம் என்று நினைத்த உதயநிதி இந்த படத்தை ஆரம்பிக்க சொல்லிவிட்டார்.நாளை படப்பிடிப்பு தொடக்கம்.
ஆனால் மகிழ்திருமேனியின் படம் தாமதமாகிறது. ஒருவேளை உதயநிதி அமைச்சராகிவிட்டால்?