அந்நியன் இந்தி ரீமேக் விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இச் சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் அந்நியன் .
16 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் அந்நியன் படத்தின் கதையைத் தழுவி இயக்குனர் ஷங்கர் இந்தியில் அந்நியன் படத்தை உருவாக்கபோகிறார்.
இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார் பென் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
.இது குறித்து இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதன் பின்னர்தான் விவகாரம் தொடங்கியது .
” இந்தத் திரைப்படத்தை ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை பெறவில்லை என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் வழக்கு தொடரவுள்ளார்.
இதற்காக இயக்குனர் ஷங்கர் மற்றும் அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இச் சம்பவம் தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.