அப்பா விக்ரம் சூப்பர் ஸ்டார். மகன் துருவ் விக்ரம் வளர்ந்து வருகிற இளம் ஆக்சன் நடிகர். கார்த்திக் சுப்புராஜ் உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தை இயக்கிய பிரபல கமர்ஷியல் நடிகர்.
இந்த மூவரும் இணைந்து ஒரு படம் பண்ணினால் அது என்னவாக இருக்கும்?
அருமையான கிரைம் த்ரில்லராக இருக்கும்.! இப்படியொரு படம்தான் இன்னும் பெயரிடப்படாமல் வளர்ந்து முடியும் நிலையில் இருக்கிறது.
வருகிற பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை நாளன்று இந்த திரைப்படத்தை திரையிடுவார்கள் போலிருக்கிறது.இந்த படத்துக்கு கர்ணன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை.
சிம்ரன் ,வாணி போஜன் ,பாபி சிம்ஹா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
விக்ரம் பொன்னியின் செல்வனிலும் ,துருவ் விக்ரம் ‘கர்ணன்’ இயக்குனர் மாரி செல்வராஜ் படத்திலும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த சேதி.