சின்ன கலைவாணர் விவேக் அனைவரையும் ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மீளா துயில் .அறிவாளிகளுடன் நெருங்கிப்பழகிய அந்த பண்பாளர் ,முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அரிய கொள்கைளை பின்பற்றி வந்தவர். இதனால்தான் ‘கிரீன் கலாம்’ என்று கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்கிற லட்சியத்தில் பல லட்சம் மரக்கன்றுகளை நன்று விட்டு எஞ்சியவைகளை நல்லவர்களை நடச்சொல்லிவிட்டு மறைந்து போனார். இவ்வளவு சீக்கிரமாக விடை பெற வேண்டுமா ?
நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தி.
“நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.” என்று மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தனது கவலையை பகிர்ந்து கொண்டிருக்கிறார் .
“வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சி.. உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட பல அற்புதமான நினைவுகள் மற்றும் தருணங்கள் எனது நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது. என் இதயம் உங்களின் குடும்பத்தினருடன் செல்கிறது.. ரெஸ்ட் இன் பீஸ் மை டியர் பிரண்ட்”..என்கிறார் ராதிகா சரத்குமார்.
இயக்குநர் மோகன் ராஜா :,
“விவேக் சார் மரணம் அதிர்ச்சியாக உள்ளது.. இந்த லெஜன்ட் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.. எம் குமரன் படத்தில் அவருடன் பணியாற்றியது பொக்கிஷமாக இருக்கும்.. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்”.
இசையமைப்பாளர் டி இமான்::
“எங்கள் விவேக் சார் இல்லை என்ற உண்மையை என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றன.. என்ன ஒரு அசாதாரண கலைஞரையும் ஒரு மனிதரையும் நாம் இழந்து விட்டோம்.. அவரது நெருங்கிய குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல்”..
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்:
“சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு… வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்! செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. எத்தகைய மனிதர்களையும் இறைவன் சூழ்ச்சியால் காவு கொள்வான் என்றால்…. எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார்…. திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்”…
இயக்குநர் சேரன்
:” செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. எத்தகைய மனிதர்களையும் இறைவன் சூழ்ச்சியால் காவு கொள்வான் என்றால்.. எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார்.. திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்”.
ஒய்.ஜி.மகேந்திரன்
:”அருமையான நடிகர். அதைவிட அருமையான மனிதர். சமுதாய அக்கறை கொண்ட மாமனிதரை இழந்துவிட்டோம். நான் மற்றும் திரை உலகமும் பேரதிர்ச்சியில் உள்ளோம். வாழந்த காலத்தில் மக்களை மகிழ்வித்தது மட்டும் அல்லாமல் பல நல்ல கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. இருப்பினும் வாழ்க்கை எனும் நாடகத்தில் திறம்பட வாழந்த ஒரு நல்ல ஆன்மா என்பது ஆறுதல். என் அருமை நண்பா , பூலோகத்தில் ஆற்றிய சேவையை சொர்கத்திலும் தொடர்வாய் என்று நான் அறிவேன். ஆன்மா சாந்தியடையட்டும்”
நடிகர் சத்யராஜ்
:”சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ‘சின்னக் கலைவாணர்’ என்று பெயர் வாங்கியவர் என் அன்பு தம்பி விவேக். மறைந்துவிட்டார் என்கிற வார்த்தையை பயன்படுத்த மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அவர் நம்முடன் இல்லாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வெறும் வார்த்தைகளால் அவரது குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ, கலையுலகிற்கோ ஆறுதல் படுத்திவிட முடியாது. தம்பி உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில், ரசிகர்களில் நானும் ஒருவன்”
கவிஞர் வைரமுத்து
:“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!
திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!
மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.
கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்”
நடிகர் கெளதம் கார்த்திக்:
“இதை நம்ப முடியவில்லை. அவர் நம்மை சிரிக்க வைத்தார், அவர் தனது நடிப்பின் மூலம் எங்களுக்குக் கல்வி கற்பித்தார், இந்த உலகத்தை கவனித்து, அதை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதைக் கற்பிக்க உதவினார். உங்களைப் போல இன்னொருவர் இருக்க மாட்டார் ஐயா .நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம். சாந்தியடைய வேண்டுகிறேன்”.
நடிகர்,இயக்குனர்:எஸ்.ஜே.சூர்யா :
“மாபெரும் கலைஞனே..மனம் உடைந்து போனேன். பெரிய இழப்பு. என்ன நடக்கின்றது?.
இயக்குநர் அஜய்ஞானமுத்து:
நொறுங்கியது !! நம் காலத்தின் மிகப் பெரிய நகைச்சுவை நடிகர் இனி இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது !! உங்களை எப்போதும் இழந்துவிட்டோமே”.
நடிகர் ராகவா லாரன்ஸ்:
“நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு”
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் :
மூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக்”.
நடிகை நஸ்ரியா :“மனிதகுல முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்த நல்ல காரியங்களுக்கும் மிக்க நன்றி”.
நடிகர் யோகி பாபு:
“நல்ல மனிதர் விவேக், விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம்”
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்::
” 1987ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ” மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம் மூலம் விவேக் அவர்கள் நடிகராக அறிமுகமானார்.34 வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் இன்று காலமானார்.ஐந்துமுறை தேசிய விருதும் தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை விருது மற்றும் கலைமாமணி சின்னக்கலைவாணர், ஜனங்களின் கலைஞன் உட்பட பட்டங்கள் பல பெற்ற ஒப்பற்ற கலைஞன் என போற்றப்பட்டவர் விவேக்.தயாரிப்பாளர்களின் மனதில் மட்டுமல்ல ரசிகர்களின் மனதிலும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் இதயத்திலும் இடம்பிடித்து பவனி வந்த விவேக் அவர்களின் மறைவு சமுதாயத்திற்கு மட்டுமல்ல திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.விவேக்கின் குடும்பத்தினருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.”