உலகநாயகன் கமல்ஹாசனுடன் நடிக்கவில்லையே என்கிற குறை அமரர் விவேக்கிற்கு அதிகமாகவே இருந்தது.
அந்த குறையை போக்கும்விதமாக இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்து வந்தார். இயக்குநர் ஷங்கர் பல காட்சிகளை படமாக்கியிருக்கிறார். அந்த காட்சிகளுக்கு டப்பிங் யார் பேசுவார் ,மீதமுள்ள காட்சிகளை யாரை வைத்து படமாக்குவார்கள் என்பது தெரியவில்லை.முடிவு ஷங்கரின் கையில்?
விவேக் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்காக காத்திருக்கும் முக்கியமான படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவேக்கின் மரணத்திற்கு பிறகு வெளிவர போகும் முதல் படம்,விஜய் சேதுபதியுடன் விவேக் இணைந்து நடித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
அடுத்ததாக விவேக், லெஜன்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஜெடி ஜெர்ரி இயக்கி உள்ளார். இந்த படத்தின் சூட்டிங்கிற்காக மணாலி சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.