சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றுக்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்டார் பவித்ரா லட்சுமி. அதிலும் சமூக வலைதளங்களில் இவர் பெயரில் வெளியாகும் (பதிவிடும்) புகைப்பட ங்களை கமெண்ட் செய்வதற்கு என்றே தனியே ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ், முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். சமீபத்தில்,கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான ‘தெறி’ படத்தில் தோன்றும் சமந்தாவை போலவே, அச்சுஅசலாக காட்சியளிக்கும் பவித்ராலட்சுமியின் புகைப்படம் ஒன்று வெளியாகி மிகவும் வைரலானது.
இதனை பார்த்த பலரும் அப்படியே சமந்தா போலவே இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த புகைப்படத்தை நடிகை சமந்தாவே பாராட்டி “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பவித்ரா கூறியுள்ள பதில் தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்பதிவில், “சமந்தா மேடம் நான் உங்களுக்கு எனது மனதின் ஆழத்திலிருந்து கோடிமுறை நன்றி செலுத்துகிறேன். ஆனால் இந்த பதிவை நான் பதிவிடவில்லை. மேக்கப் கலைஞர் ஒருவர் விரும்பியதால் தான் இப்படி ரீ -கிரியேஷன் (போட்டோஷூட்) செய்தோம். நாங்கள் அனைவருமே உங்களது மிகப்பெரிய ரசிகர்கள். ஒரு சதவீதம் கூட உங்கள் அளவுக்கு நான் வரமுடியாது. நீங்கள் எனக்கு அவ்வளவு பெரிய உந்துதல். ஆனால், இந்த ‘டுவிட்டர்’ பக்கம் என்னுடையது அல்ல. இது ஒரு ஃபேக் ஐடி” என்று கூறியுள்ளார்.இது சமந்தாவை மட்டுமல்ல,பவித்ராவின் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பொய்யில் மலர்ந்த புது கவிதை.!