பகலில் மக்களை மானாவாரியாக நடமாடச்செய்து விட்டு இரவில் ஊரடங்கு போட்டதே இதற்காகத்தானய்யா என்று மக்கள் பேசுமளவுக்கு மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருக்கிறது.
திராவிட முன்னேற்றக்கழகம் ,சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகுவை சந்தித்து புகார் செய்திருந்தார்கள்.
தற்போது மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய கட்சி நிர்வாகிகள் சிலருடன் காலையில் தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் செய்திருக்கிறார்.
“வாக்கு எண்ணும் மையங்கள் அருகில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருக்கிறது.
வாக்கு பதிவு செய்யப்பட்ட எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் உண்மையிலேயே ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.
அந்த அறை அருகே மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருக்கிறது.
அறை அருகில் மர்மமான முறையில் வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
லேப்டாப்புகளுடன் மனிதர்களின் நடமாட்டம் இருக்கிறது.” -இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கோவை தெற்கு தொகுதியில் நேற்று இரவில் இருந்து மர்ம மனிதர்கள் கையில் டார்ச்சுடன் நடமாடுவதாக தகவல் கிடைத்திருக்கிறது.