ஒரே குழந்தைக்கு இரண்டு தாய் இருக்க முடியுமா?
தற்போது அந்த வழக்குதான் சபை ஏறி இருக்கிறது.!
அந்நியன் பட உரிமை தன்னுடையது என்கிறார் இயக்குநர் ஷங்கர். “இல்லையில்லை தனக்கேயுரியது” என்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
அந்நியன் படம் இந்தியில் ரீமேக் ஆகப்போகிறது .அதில் ரன்வீர்சிங் அந்நியன் கேரக்டரில் நடிக்கிறார் என்பதாக ஷங்கர் சார்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
இதில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இவர்தான் என சொல்லி கன்னட நடிகரின் படத்தை ஊடகங்கள் பிரசுரித்து குழப்பிக்கொண்டிருக்கின்றன.
அந்நியன் பட உரிமை தொடர்பாக தென்னிந்திய வர்த்தகசபையின் முடிவுக்கு கொண்டு போயிருக்கிறார் ஆஸ்கார் ரவி. முன்னதாக ஷங்கருக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் ஆஸ்கர் ரவி.!
ஆனால் அந்த உரிமை குரலுக்கு ஷங்கர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
“அந்நியன் படத்தின் கதை தன்னுடையது, சுஜாதா டயலாக் மட்டுமே எழுதினாரே தவிர, கதையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதாக கூறப்பட்டிருந்தது.
தென்னிந்திய வர்த்தக சபை என்ன சொல்லப்போகிறதோ?