கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெளிவந்துள்ள கர்ணன் படம் தியேட்டர்களில் அரசின் கொள்கைப்படி ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது
மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடித்துள்ள தனுஷுக்கு இது மற்றுமொரு வெற்றிப்படம்.
கர்ணன் வந்தபிறகு மாரி செல்வராஜ் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு அடுத்த படத்துக்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்.
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கிற படமும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டதுதான்.இந்த படத்தை தயாரிப்பவர் பா.ரஞ்சித் .
தூத்துக்குடி அருகில் இருக்கிற மணத்தி கணேசன் என்கிற கபடி விளையாட்டு வீரரை பற்றிய கதை.தேசிய அளவில் புகழ் பெற்ற இந்த வீரரை சுற்றி ஒருவித சோகமும் இருப்பதாக சொல்வார்கள்.