நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித். மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
வெளிநாட்டில் படத்தின் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில்,தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1 வரவில்லை என.. தயாரிப்பு தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மே 1ஆம் தேதி அஜித் குமாரின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு , அவரது நடிப்பில் , வினோத் இயக்கத்தில் , எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “வலிமை” படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.ஆனால்,கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து , நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.
இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் “வலிமை” படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பிராத்திப்போம்” என்று கூறப்பட்டுள்ளது.