தெறி’ படம் வெளியாகி பாசிட்டிவ் ரிப்போர்ட் வரத் தொடங்கியுள்ளதை அடுத்து, செங்கல்பட்டு ஏரியாவிலுள்ள சில திரையரங்கங்கள் தெறி படத்தை வெளியிடுவதற்கு முன்வந்துள்ளதாகவும், அந்த தியைரங்கங்களைத் தவிர்த்து, ‘தெறி’ படத்தை கடைசிவரை வெளியிடாத தியேட்டர்களுக்கு இனி முன்னணி நடிகர்களின் படங்களை தரப்போவதில்லை .மேலும் ,என தாணு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இன்று நடந்த தயாரிப்பாளர் சங்க அவசரக் கூட்டத்தில் செயலாளர் சிவா பேசியதாவது: “படம் ரிலீசாகி ஓடுவது என்பது கடினமாக உள்ள இந்த சூழ்நிலையில் தியேட்டர் உரிமையாளர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வரும் காலங்களில் வரக்கூடிய பெரிய படங்கள் இந்த தியேட்டர்களுக்கு கெடுக்கப்படமாட்டாது. ஒரு படம் ஓடவில்லை என்றால் இழப்பின் வலி எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் தெரியவேண்டும்.
ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் ஸ்கிரீன் போட்டு, உரிய அனுமதியுடன் படத்தை ஓட்ட ஏற்பாடு செய்தாலும் செய்வோமே தவிர இத்தகைய தியேட்டர்களுக்கு கொடுக்க மாட்டோம்.என்று பேசினார் .
இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் விதமாக திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அறிக்கை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.