இயக்குநர்கள் கே. பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் வெளியான ரெட்டச்சுழி, சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் தாமிரா (வயது 44) கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்
.அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் தாமிராவின் இயற்பெயர் காதர் மைதீன் (வயது 53) .
இவரது சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள மூலைக்கரைப்பட்டியாகும் ,இவர் கே. பாலச்சந்தர் இயக்கியுள்ள சகாரா, அண்ணி, மனைவி போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனமும், திரைக்கதையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் . அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் தாமிராவுக்கு மனைவியும், 3 மகன்கள்,ஒரு மகள் உள்ளனர்.