தமிழ்த்திரையுலகில் 80 மற்றும் 90 களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நவரச நாயகன் என அழைக்கப்படும் கார்த்திக். தற்போது பிரசாந்த் நடிக்கும் இந்தி அந்தாதுன் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப் படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கார்த்திக் ஏற்கனவே முதல் டோஸ் போட்டுக் கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும்,இப் படத்தில் நடித்து வரும் நடிகை ஊர்வசியும் , முதல் டோசை படப்பிடிப்பு தளத்திலேயே போட்டுக் கொண்டார்.அந்தகன் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது