முன்னாள் நடிகை விந்தியா இப்போது தீவிர அரசியல்வாதி.
அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் .
நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் இவர்தான் தலைமை நட்சத்திர பேச்சாளர் . இவருக்குத்தான் அதிமுக தலைமை முக்கியத்துவம் கொடுத்திருந்தது.
பிரசாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,உதயநிதி இருவரையும் கடுமையுடன் விமர்சனம் செய்து பேசினார்.
இதனால்தான் விந்தியாவுக்கு திமுகவினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்திருக்கிறார்கள் என்பது விந்தியாவின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக தன்னோட டிவிட்டர் பக்கத்தில் “எனக்கு என்ட் கார்டு போட எவனாலும் முடியாது “என்று வடிவேலு பாணியில் சொல்லியிருக்கிறார்.
“உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா.”