இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், திரிஷா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவல் ஓன்று தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தில் குந்தவை பிராட்டியார்(சுந்தரசோழரின் மகள் கதாப்பாத்திரத்தில், கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில்,. குந்தவை கதாபாத்திரம் கதையின்படி, வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன் (கார்த்தி) கேரக்டருக்கு ஜோடி என்பதும், அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர் (ஜெயம்ரவி) கேரக்டருக்கு (தமக்கை) அக்கா என்பதும் குறிப்பிடத்தக்கது.